ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிட கோட்டா விருப்பம்

🕔 July 19, 2021

கோட்டபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் விருப்பம் வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடத் தயாராக இருப்பதை ஜனாதிபதி இன்று உறுதிப்படுத்தினார்.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலதிகமாக, தனது கொள்கைகளை செயல்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்