றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

🕔 July 24, 2021

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

விசாரித்த பின்னர் நாளை மறுநாள் 26 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனித கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு கொடுமை செய்த குற்றங்களுக்காக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மைத்துனரை (மனைவியின் சகோதரர்) தடுத்து வைக்க, பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்