வைத்தியசாலையில் இருந்து றிசாட் அழைத்துச் செல்லப்பட்டார்

🕔 July 24, 2021

கொழும்பு தேசிய வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்துச் செலலப்பட்டார்.

சுமார் 03 மாதங்களாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்