சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம்

🕔 July 22, 2021

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையிலான 09 நீதிமன்றங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கு நிறுவ மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

சிறுவர்களின் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் என ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பில் நீதி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் அனைத்து மாகாணங்களுக்கும் சிறுவர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை நிறுவ தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன”.

“சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் தாமதமாகிவிட்டன. தற்போது முழு நாட்டிற்கும் இரண்டு சிறுவர் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன.

ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய தரவுகள் சேகரிக்கும் மையங்களை, நிறுவ தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் ஒன்றிணைந்து ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும்” ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்