ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது

🕔 July 19, 2021

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் – காரைதீவு சந்திப் பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி சந்தேகத்திற்கிடமான முறையில் உலவுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காரைதீவு சந்திக்கு அருகில்   சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடத்தியபோது இந்தக் கைது இடம்பெற்றது.

43 வயதுடைய கல்முனை பகுதியை சேர்ந்த  சந்தேக நபர் ஒருவரே, 01 கிலோ கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதாகிய சந்தேக நபர் உட்பட அவர் பயணம் செய்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்