இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், இலங்கையிலிருந்து விடைபெறுகிறார்

🕔 July 22, 2021

– முன்ஸிப் அஹமட் –

லங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்த எஸ். பாலச்சந்திரன், அந்தப் பதவியிலிருந்து விடை பெற்றுச் செல்வதாக அறிவித்துள்ளார்.

இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வட மாகாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்தார்.

எஸ். பாலசந்திரன் வகித்து வந்த மேற்படி இந்தியத் துணைத் தூதுவர் பதவியை, விரைவில் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பொறுப்பேற்கவுள்ளார் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விடைபெற்றுச் செல்லும் எஸ். பாலச்சந்திரன் – வட அமெரிக்க நாடான சுரினாம் குடியரசுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்கும் இந்திய நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்