றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

🕔 July 23, 2021

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

றிசாட் பதியுதீனின் மனைவி சஹாப்தீன் ஆயிஷா மற்றும் மனைவியின் தந்தை முகம்மட் சஹாப்தீன் (70 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து றிசாட் பதியுதீன் வீட்டாரிடம் ஒப்படைத்த தரகர் – டகமக பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் 64 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டயகம பகுதியைச் சேர்ந்த இஷாலினி எனும் சிறுமி, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுடைய வீட்டில் பணி புரிந்து வந்த போது, தீக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் மரணித்தார்.

தொடர்பான செய்தி: றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்