கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணைய வழி விரிவுரைகளில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் விலகல்

🕔 July 28, 2021

ர்ச்சைக்குரிய கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று (28) இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று முதல் இணைய வழி விரிவுரைகளை நடத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வார்கள் என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.

இலவச கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது..

இதேவேளை, குறித்த சட்டமூலம் தொடர்பாக அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்று ராஜாங்க அமைச்சர் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழியாக விரிவுரைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்