உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு

🕔 July 28, 2021

க்காத ‘லன்ச் சீற்’ வகைகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அந்த வகையில் உக்காத ‘லன்ச் சீற்’ வகைகளை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் நாட்டில் தடை செய்யப்படவுள்ளது.

உக்காத ‘லன்ச் சீற்’ வகைகள் சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தினமும் 12 தொடக்கம் 15 மில்லியன் ‘லன்ச் சீற்’ வகைகள் சூழலில் சேர்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொலிதீனால் செய்யப்பட்ட உக்காத ‘லன்ச் சீற்’ வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பாக 2017ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், அந்தத் தடை முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்