இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு

🕔 July 29, 2021

லங்கையில் சிறுவர்களின் ஆபாச வீடியோகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் என கடந்த ஜுன் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் ஜுலை 28ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் மொத்தமாக 17,629 வகையானவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கணினி, மடிக்கணினி, கைபேசிகள் மற்றும் டெப் ஆகியவற்றின் ஊடாக இவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகளைக் கண்காணிக்க பொலிஸ் திணைக்களத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறப்பு பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், அப்பிரிவுக்கு காணாமல் போன மற்றும் சுரண்டலுக்குள்ளான சிறுவர்களுக்குரிய தேசிய மையம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த பிரிவினரால் பல்வேறுபட்ட சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், சிறுவர் தொடர்பான ஆபாசப்படங்களை வெளியிடும் சந்தேக நபர்களைகக் கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

இவ்வாறான சிறுவர் ஆபாச வெளியீடுகளை வெளியிடுவோர் மற்றும் பகிர்வோர்வோர் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்