சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா

🕔 July 31, 2021

மைச்சர் சரத் வீரசேகரவின் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த 02 திணைக்களங்கள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இவ்வாறு ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் தற்போது, பொலிஸ் மற்றும் தேசிய போலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவை மட்டுமே உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்