Back to homepage

Tag "க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை"

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி 0

🕔14.May 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் – பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாத கால அவகாசம் தேவையாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து

மேலும்...
க.பொ.த. சா/த பரீட்சை; விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்காது: கல்வியமைச்சர் உறுதி

க.பொ.த. சா/த பரீட்சை; விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்காது: கல்வியமைச்சர் உறுதி 0

🕔13.May 2024

க.பொ.த சாதாரண தர விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை நாடாளுமன்றில் தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், விஞ்ஞான பாடத்துக்கான வினாத்தாளிலுள்ள கேள்விகள் மற்றும் தெரிவு

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல் 0

🕔29.May 2023

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று (29) ஆரம்பமாகியுள்ள நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவரும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகிறார். மொத்தமாக இந்தப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனைக் கைதி உட்பட ஐந்து கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தும், ஏனைய ஐந்து கைதிகள் வட்டரெக சிறைச்சாலையிலிருந்தும் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என

மேலும்...
அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை

அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை 0

🕔25.May 2023

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் – 2022 (2023) தொடர்பாக, பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி – பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் என – பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அனுமதி அட்டைகள் கிடைக்காத

மேலும்...
அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது 0

🕔9.Mar 2021

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உறவினர்

மேலும்...
சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர்

மேலும்...
ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு 0

🕔7.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த வருடம் மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த வருடம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சை, கொரோனா அச்சம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி 18ஆம்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Dec 2020

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ஏற்பட்டமையினால், திட்டமிடப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என ஏற்கனவே கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

மேலும்...
ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா? 0

🕔27.Apr 2020

– அஹமட் – இன்று வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி பெற்றுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை ரஞ்சன் ராமநாயக்க பகிர்ந்துள்ளார். தான் சட்டக் கல்வியை கற்க விரும்புவதாகவும், அதற்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் 0

🕔27.Apr 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று திங்கட்கிழமை மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 4987 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.

மேலும்...
க.பொ.த. சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்: சார்க் விளையாட்டில் பங்கு பற்ற சென்றோருக்கு காத்மன்டுவில் விசேட நிலையம்

க.பொ.த. சாதாரண பரீட்சைகள் இன்று ஆரம்பம்: சார்க் விளையாட்டில் பங்கு பற்ற சென்றோருக்கு காத்மன்டுவில் விசேட நிலையம் 0

🕔2.Dec 2019

க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள்  இன்று ஆரம்பமாகியது. இந்தப் பரீட்சைகள்  எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையும். இம்முறை நாடளாவிய ரீதியில் 07 லட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர்.  பரீட்சைகளை நடத்துவதற்காக 4, 987 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, 541 ஒருங்கிணைப்பு நிலையங்களும் நிருவப்பட்டுள்ளன. 

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை 0

🕔29.Mar 2019

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலன்கா திசிவரி வருஷவித்தான என்பவர், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று வியாழக்கிழமை இரவு வௌியாகின இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில்

மேலும்...
பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம்

பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம் 0

🕔10.Dec 2018

– பாறுக் ஷிஹான் –  க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபரொருவர், மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திலேயே இந்த ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளது. பாரதிபுரத்துக்கு அண்மையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவருக்காக இந்த ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்தவர், 30

மேலும்...
12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார்

12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார் 0

🕔29.Nov 2018

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 12 கைதிகள், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 11 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும், ஒருவர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தமிழ் மொழி மூலமாகவும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைதிகளுக்கான பரீட்சை நிலையத்தை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; அனுமதி அட்டை கிடைக்காதோர், இணைத்தில் பெற்றுக் கொள்ளலாம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; அனுமதி அட்டை கிடைக்காதோர், இணைத்தில் பெற்றுக் கொள்ளலாம் 0

🕔27.Nov 2018

க.பொ.த. சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்​டைகள் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதியட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும். பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.doenetd.lk  என்ற இணையத்தளத்திலிருந்து பரீட்சார்த்திகளின் அடையாள அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் 4661 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்