தெற்கு ஆசியாவில் அதிகளவில் ‘ஸ்மாட்’ தொலைபேசிகளைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவு

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ‘ஸ்மாட்’ தொலைபேசிகளைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவு 0

🕔31.Mar 2021

தெற்கு ஆசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம்

சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம் 0

🕔31.Mar 2021

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பான புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார் தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப

மேலும்...
கணிக்கறிக்கை சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகள்: அங்கீகாரத்தை ரத்துச் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

கணிக்கறிக்கை சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகள்: அங்கீகாரத்தை ரத்துச் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை 0

🕔31.Mar 2021

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் 04 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையை இதுவரை கையளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த கட்சிகள்

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டப்படிப்பு நிறுவனத்தின் 50 லட்சம் ரூபா மோசடி: கோப் குழுவுக்கு தெரிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டப்படிப்பு நிறுவனத்தின் 50 லட்சம் ரூபா மோசடி: கோப் குழுவுக்கு தெரிவிப்பு 0

🕔31.Mar 2021

பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் பேணப்பட்டு வந்த நிலையான வைப்புக் கணக்குகளில் 50 மில்லியன் ரூபா நிதி, முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் மக்கள் வங்கியின் பேராதனைக்

மேலும்...
31 புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நாடுகடத்தியது

31 புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நாடுகடத்தியது 0

🕔31.Mar 2021

புகலிடக் கோரிக்கையாளர்களான 31 தமிழர்களை, இலங்கைக்கு ஜேர்மன் நேற்று நாடுகடத்தியது. இதேவேளை நாடுகடத்தப்பட கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்னர். புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஜேர்மன் மனிதநேய மற்றும் அகதிகள் நலன்சார் அமைப்புக்கள், சட்ட வல்லுனர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினாலும், புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையிலும் கைது

மேலும்...
கல்முனை  பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

கல்முனை பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல் 0

🕔31.Mar 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக , இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   வியாழக்கிழமை (01)  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் கீழ் நடத்துவது; அமைச்சரவைத் தீர்மானம் பிற்போடப்பட்டது

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் கீழ் நடத்துவது; அமைச்சரவைத் தீர்மானம் பிற்போடப்பட்டது 0

🕔30.Mar 2021

மாகாண சபை தேர்தலை எந்த முறைமையின் அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பாக, அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் – மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த

மேலும்...
எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்,  பணியிலிருந்து இடைநிறுத்தம்

எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர், பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔29.Mar 2021

நடுவீதியில் வைத்து வாகனச் சாரதியொருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் வீதியில் விழுந்த போதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரின் மேல் ஏறி குதிப்பதை வீடியோவில் காணமுடிகின்றது. இதன்போது தாக்குதலுக்குள்ளான வாகனச்சாரதியை குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தூஷண வார்த்தைகளால் ஏசுவதையும் கேட்க முடிகிறது. சமூக ஊடகங்களில் காணப்பட்ட இந்த வீடியோவை

மேலும்...
வீதி நடுவில் சாரதி ஒருவரை தாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்: பேஸ்புக் இல்  வெளியானது வீடியோ

வீதி நடுவில் சாரதி ஒருவரை தாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்: பேஸ்புக் இல் வெளியானது வீடியோ 0

🕔29.Mar 2021

வீதிப் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நபரொருவரைத் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியொ ஒன்று பேஸ்புக் இல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வீதியின் நடுவில் – நபரொருவரைத் தாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, லொறி சாரதி

மேலும்...
பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு

பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு 0

🕔29.Mar 2021

– முன்ஸிப் அஹமட் – “பெண்களின் அதிகளவான உடற்பருமனானது முன்னேற்றத்துக்கான பங்களிப்பில் கணிசமானளவு தடையாக இருப்பதாக நான் கருதுகிறேன்” என, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார். “உலகில் முன்னேறிய நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எமது நாடு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று

மேலும்...
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔29.Mar 2021

கோட்டே மாநகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநகர சபை உறுப்பினர் தம்மிக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, இன்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

மேலும்...
அரசியல் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஈஸ்டர் தின தாக்குதல் நடத்தப்பட்டது: றிஷாட் பதியுதீன்

அரசியல் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஈஸ்டர் தின தாக்குதல் நடத்தப்பட்டது: றிஷாட் பதியுதீன் 0

🕔29.Mar 2021

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தின தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது 0

🕔29.Mar 2021

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த யூரியூப் தளம், இணையத்தளம் தொடர்பில் சர்வதேச

மேலும்...
இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம்

இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் 0

🕔29.Mar 2021

இலங்கையில் 1250 வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் தலையீட்டின் மூலம் இந்த வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும் வரை இலங்கையில் அவர்களுக்கு தற்காலிக அரசியல் தஞ்சம் வழங்கப்படவுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈராக், மாலைத்தீவு உள்ளிட்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகள்; இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகள்; இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்ப்பு 0

🕔29.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணை குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர் அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

மேலும்...