க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல்

🕔 May 29, 2023

.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று (29) ஆரம்பமாகியுள்ள நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவரும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்.

மொத்தமாக இந்தப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனைக் கைதி உட்பட ஐந்து கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தும், ஏனைய ஐந்து கைதிகள் வட்டரெக சிறைச்சாலையிலிருந்தும் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை புதிய மகசீன் சிறைச்சாலை மற்றும் வட்டரெக சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் இந்தக் கைதிகள் பரீட்சை எழுதுவார்கள் என சனதன ஏக்கநாயக்க மேலும் குறுிப்பிட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்றும் சிறைச்சாலைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்