ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

🕔 April 27, 2020
பரீட்சை எழுதிய பின்னர், சக பரீட்சார்த்திகளுடன் ரஞ்சன் எடுத்துக் கொண்ட செல்ஃபி

– அஹமட் –

ன்று வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி பெற்றுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை ரஞ்சன் ராமநாயக்க பகிர்ந்துள்ளார்.

தான் சட்டக் கல்வியை கற்க விரும்புவதாகவும், அதற்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி தேவை என்றும் தெரிவித்திருந்த ரஞ்சன் ராமநாயக்க, கடந்த வருடம் ஆங்கிலப் பாடத்துக்கான பரீட்சையில் தோற்றியிருந்தார்.

ஏற்கனவே, க.பொ.த. சாதரண தரத்தின் ஏனைய பாடங்களில் சித்தியடைந்துள்ளதாகவும், ஆங்கிலப் பாடத்தில் அவர் ‘எஸ்’ (S) சித்தி பெற்றிருப்பதாகவும் ரஞ்சன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று வெளியான பரீட்சை முடிவின்படி, தான் ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி பெற்றிருப்பதை, தனது பேஸ்புக் பக்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க பகிர்ந்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்