க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தேசிய ரீதியாக, பெண் பிள்ளைகள் சாதனை
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலன்கா திசிவரி வருஷவித்தான என்பவர், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று வியாழக்கிழமை இரவு வௌியாகின
இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 06 லட்சத்து 56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்துக்கு மூன்று மாணவிகள் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியோர் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.