12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார்
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 12 கைதிகள், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 11 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும், ஒருவர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தமிழ் மொழி மூலமாகவும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கைதிகளுக்கான பரீட்சை நிலையத்தை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு செய்யும் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
டிசெம்பர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை, க.பொத.த. சாதரணதரப் பரீட்சை நடைபெறவுள்ளது.