அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

🕔 March 9, 2021

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உறவினர் ஒருவருக்காக கணித பரீட்சை எழுத முற்பட்டமை தொடர்பில் பரீட்சை கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹராம, வீரவல பகுதியை சேர்ந்த குறித்த நபர் பரீட்சை எழுதுவதற்காக அநுராதபுரத்துக்கு வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் வலஸ்முல்ல மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இது போன்று பரீட்சை எழுத முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்