ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

🕔 December 7, 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த வருடம் மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த வருடம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சை, கொரோனா அச்சம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தமையை அடுத்து, அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு மேற்படி பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments