க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; அனுமதி அட்டை கிடைக்காதோர், இணைத்தில் பெற்றுக் கொள்ளலாம்

🕔 November 27, 2018

.பொ.த. சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்​டைகள் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதியட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.

பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.doenetd.lk  என்ற இணையத்தளத்திலிருந்து பரீட்சார்த்திகளின் அடையாள அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் 4661 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 02 லட்சத்து 33 ஆயிரத்து 791 தனிபட்ட பரீட்சார்த்திகளின் அனுமதியட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

டிசெம்பர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை மேற்படி பரீட்சை நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்