Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம்

ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம் 0

🕔28.Jul 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் செனரத் கப்புக்கொட்டுவ நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார். இவர் மரணமாகும் போது, கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான கப்புக்கொட்டுவ, 2001ஆம் ஆண்டு, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரானார்.  

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு 0

🕔19.Jul 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு டிசம்பர் மாதத்தில் ஆயத்தமாக வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  செயற்குழுவுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏதேனும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறாவிட்டால்,

மேலும்...
அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக

அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக 0

🕔15.Jul 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “புதிய அரசியலமைப்பை

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு

அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு 0

🕔18.Jan 2017

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சபையில் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவிப்பதற்கு முன்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துரலியே ரதன தேரர் இதற்கு முன்னரும் கோட்டாவுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமான பேச்சுவார்த்தை

மேலும்...
ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா

ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா 0

🕔5.Jan 2017

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று புதன்கிழமை, அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடியது. ஐ.தே.கட்சிக்குள் தற்போது காணப்படும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாகவே, இந்த துணைச் செயலாளர்

மேலும்...
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே 0

🕔5.Dec 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறி, போலி ஆவணமொன்றினைத் தயாரித்து, அதை வெளிப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட திஸ்ஸ

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு 0

🕔26.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்ட போலி ஆவணமொன்றை தயாரித்து வெளியிட்டமை தொடர்பாகவே திஸ்ஸ

மேலும்...
ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Sep 2016

– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை ஆராயும் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ செயல்திட்டத்தின்போது,  இப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...
யானைக்கு வயது 70

யானைக்கு வயது 70 0

🕔6.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆரம்பிக்கப்பட்டு இன்று 06 ஆம் திகதியுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இலங்கையின் முதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வருட நிறைவையொட்டி நாடு முழுவதும் சமய நிகழ்வுகள்

மேலும்...
அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை

மேலும்...
பிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை

பிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை 0

🕔27.Jul 2016

முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி, இலங்கையின் தேர்தல் அரசியலில் அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்ற படிப்பினையை, எதிர்காலத்திலும் செல்லுபடியாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதிய கடிதமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் சரத் பொன்சேகா 0

🕔30.Jun 2016

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை, தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியும், சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில்

மேலும்...
நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

தகவலறியும் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்று, அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த ஆழ வேரூன்றிய அநீதிகள்தான், ஒரு பிரிவினர் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வன்முறைகளை கையாள வழிவகுத்தது என்றும் அவர்

மேலும்...
ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல் 0

🕔10.May 2016

ராஜபக்ஷவினர் புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போகின்றமையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதோடு, அந்தக் கட்சியின் நிறம் நீலமாக இருக்காது என்றும் கூறினார். நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவின் இரண்டாவது மகனும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளருமான ரக்கித ராஜபக்சவின் திருமண வைபவம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில்

மேலும்...
ஐ.தே.க. உயர் பதவிகளில் மாற்றம்

ஐ.தே.க. உயர் பதவிகளில் மாற்றம் 0

🕔23.Jan 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாதவர்களுக்கு கட்சியின் தவிசாளர், செயலாளர் போன்ற உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் கட்சியின் உயர்மட்ட பதவிகளை வகிக்கின்றமையினால், அமைச்சு சார்ந்த பணிகளில் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்ற முடியாமலுள்ளதாகவும், அதனால் அமைச்சின் பணிகள் மந்தமடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்