ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் சரத் பொன்சேகா

🕔 June 30, 2016

Sarath Fonseka - 0987பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியும், சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, தனது தலைமையிலான ஜனநாயக கட்சி கலைக்கப்படப் போவதில்லை எனவும், அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற யாப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்