ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல்

🕔 May 10, 2016

Namal - 097ராஜபக்ஷவினர் புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போகின்றமையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதோடு, அந்தக் கட்சியின் நிறம் நீலமாக இருக்காது என்றும் கூறினார்.

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவின் இரண்டாவது மகனும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளருமான ரக்கித ராஜபக்சவின் திருமண வைபவம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்பட்டிருந்தது. நாமல் கலந்து கொண்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை, அப்போதைய மஹிந்த ஆட்சியாளர்கள் பதவி நீக்கம் செய்ய முயன்ற போது, சட்டத்தரணிகள் சங்கத்தினால் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் அப்போதைய தலைவராக விஜேதாஸ ராஜபக்சஸ பதவி வகித்தார்.

இந்த நிலையில், அப்போது விஜேதாஸ ராஜபக்ஸவை அலரி மாளிகைக்கு அழைத்த மஹிந்த, தனியான அறையொன்றில் வைத்து கடுமையாக தாக்கியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இவற்றையெல்லாம் மறந்து விட்டு, தனது மகனின் திருமண வைபவத்துக்கு நாமல் ராஜபக்சஷவை – நீதியமைச்சர் விஜேதாஸ அழைத்திருந்தார்.

குறித்த திருமண வைபவத்திற்கு வருகை தந்திருந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவர் நீல நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தார்.

இந்த நிலையில், நாமலைக் கண்ட மேற்படி அமைச்சர், “இன்று நான் உங்கள் கட்சியின் நிறத்தில் ஆடை அணிந்து வந்துள்ளேன்” என்று நட்புடன் கூறினார்.

அதற்கு பதிலளித்த  நாமல்; “நீல நிறம் இனியும் எங்கள் நிறம் அல்ல. எங்கள் குழுவினர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளனர். அதன் நிறம் நீலம் அல்ல” என்று கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்