ஐ.தே.க. உயர் பதவிகளில் மாற்றம்

🕔 January 23, 2016

UNP - 098க்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாதவர்களுக்கு கட்சியின் தவிசாளர், செயலாளர் போன்ற உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் கட்சியின் உயர்மட்ட பதவிகளை வகிக்கின்றமையினால், அமைச்சு சார்ந்த பணிகளில் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்ற முடியாமலுள்ளதாகவும், அதனால் அமைச்சின் பணிகள் மந்தமடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அமைச்சுப் பதவிகளை வகிக்காதோரை கட்சியின் உயர்மட்ட பதவிகளில் அமர்த்துவதனால், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை சிறந்த முறையில் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்