எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள் திணைக்களம் உறுதி செய்தது

🕔 January 23, 2016

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரீப் தௌபீக் (எம்.எஸ். தௌபீக்) மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின்M.S.Thowfeek - 0897 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையினை தேர்தல்கள் திணைக்களம் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.தே.கட்சியினால் மு.காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் கடந்த செவ்வாய்கிழமை, தனது பதவியினை ராஜிநாமா செய்திருந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னைய நாடாளுமன்றில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எஸ். தௌபீக், உள்ளுர் போக்குவரத்து பிரதியமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

இந்த நிலையில், இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்