தலைப்புச் செய்திகள்

“ஓ.எல் படிக்காதவர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிக்க, தகுதியானவர்கள் இல்லை என்கிறீர்கள்”: நாடாளுமன்றில் ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கிய ஹிஸ்புல்லா

.பொ.த சாதாரண தரம் கூட (O/L) படிக்காதவர்களை – இந்த அரசாங்கம் தங்கள் அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை எனக் கூறிக் கொண்டிருப்பதாக, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

1947ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், அனைத்து அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டிய அவர்; அந்த அமைச்சர்களில் முக்கியமானவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

“1947 ஆம் ஆண்டு முதலாவது அமைச்சரவை டி.எஸ். சேனநாயக்க தலைமையில் அமைந்த போது, அதில் 14 அமைச்சர்களை அங்கம் வகித்தனர். அவர்களில் டொக்டர் டி.பி. ஜாயா, முதலாவது முஸ்லிம் அமைச்சராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டிலேயே டட்லி சேனநாயக்க ஆட்சியில் – டொக்டர் எம்.சி.எம். கலீல் அமைச்சரானார்.1956 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியூ.ஆ.ர்டி. பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் சி.ஏ.எஸ். மரைக்கார் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1970 ஆம் ஆண்டு சினிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியிலே டொக்டர் பதியுதீன் மஹ்மூத் அமைச்சராக இருந்தார்.

இப்படி கடந்த 80 ஆண்டுகளாக, 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையும், ஒவ்வொரு அமைச்சரவிலும் ஒருவர், இருவர், சிலவேளை ஐவர் கூட – அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி பதவியேற்று – அவருடைய அரசாங்கம் அமைத்ததன் பின்னர், அவரின் அமைச்சரவையிலே அமைச்சராக முஸ்லிம்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த விடயங்களை பற்றி நாங்கள் பேசியபோதெல்லாம்; முஸ்லிம்களில் அனுப்பவம் அல்லது தகுதியானவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

” இந்த அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில், தற்போது இந்த சபைக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கின்ற நீங்கள்றிஸ்வி சாி ஒரு எம்பிபிஎஸ் டொக்டர், மிகச் சிறந்த அரசியல் பின்னணியை கொண்டவர். நீண்ட காலமாக ஜே.வி.பி கட்சியில் அங்கத்தவராக இருந்தவர். சிறந்த ஒரு வைத்திய நிபுணர். அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் அக்ரம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு பொறியியலாளர். பிரதியமைச்சர் முனீர் முலாபர் ஒரு பட்டதாரி, அதேபோன்று அஸ்லம் – ஒரு பட்டதாரி ஆசிரியர், ஆதம்பாவாவும் ஒரு பட்டதாரி ஆசிரியர். அநேகமான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று மொழிகளிலும் பேசக்கூடியவர்கள்.

ஜே.வி.பி தலைவர் சோமவன்ச காலத்திலிருந்து – இவர்களில் அநேகமானோர் ஜேவிபி கட்சியில் இருக்கின்றார்கள்.

தற்போதைய உங்களின் அமைச்சரவை எடுத்துப் பார்க்கின்ற போது, அமைச்சர்களில் சிலர் O/L கூட படிக்காதவர்கள். பாடசாலைக்குச் செல்லாதவருக்கு கூட – உங்களுடைய அமைச்சரவையில் இருக்கிறார்கள். அதேபோன்று A/L பரீட்சை எழுதாதவர்கள் இருக்கிறார்கள். சிலர் டிப்ளோமா வரையில்தான் பத்துள்ளார்கள்.

ஆகவே, உங்கள் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அமைச்சராக நியமியுங்கள். ஏனென்றால் இது முஸ்லிம்களுடைய உரிமை, கடந்த 80 வருடங்களாக நாங்கள் அனுபவித்து வருகின்ற உரிமையாகும்” என்றார்.