யானைக்கு வயது 70

🕔 September 6, 2016

UNP - 098க்கிய தேசியக் கட்சிக்கு ஆரம்பிக்கப்பட்டு இன்று 06 ஆம் திகதியுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இலங்கையின் முதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வருட நிறைவையொட்டி நாடு முழுவதும் சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தினம், ஐக்கிய தே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டமொன்றும் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.யின் 70 ஆவது வருட நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்