ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

🕔 September 24, 2016
imran-mp-098– சை.மு. ஸப்ரி –

தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.

பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை ஆராயும் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ செயல்திட்டத்தின்போது,  இப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மேற்படி பாலத்துக்குரிய நிர்மாணத்துக்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன.

இப்பகுதியில் பாலமொன்று இல்லாமையால் இப்பகுதி விவசாயிகள் தமது மூலப்பொருட்கள் மற்றும் முடிவுப்பொருட்களை கொண்டுசெல்வதில், பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

மேற்படி பாலத்துக்குரிய நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் உட்பட  பொதுமக்களின் நீண்டகால குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.imran-mp-097

Comments