எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள்

எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள் 0

🕔27.Aug 2023

நாட்டில் இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருந்த போதிலும் டெங்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 61,225 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஜனவரி

மேலும்...
குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை

குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை 0

🕔26.Aug 2023

கைத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்துக்கு கடுமையான அடிமையாதல் காரணமாக, சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை என்றும், அது ஒரு மனநோய் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான குழந்தைகள்

மேலும்...
இலங்கையில் புதிய ரக மின்சார முச்சக்கர வண்டி அறிமுகம்

இலங்கையில் புதிய ரக மின்சார முச்சக்கர வண்டி அறிமுகம் 0

🕔26.Aug 2023

இலங்கையில் எலெக்ட்ராடெக் (Elektrateq) எனும் பெயரில் புதிய மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான வெகா இனொவேசன் (Vega Innovation), இந்த புதிய ரக மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய முச்சக்கர வண்டிகள் போலல்லாமல், எலெக்ட்ராடெக் எனும் இந்த முச்சக்கர வண்டியானது, பல்துறை பயன்பாட்டை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தினசரி சவாரி

மேலும்...
மயோன் முஸ்தபா: ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளையில் இன்றிரவு நடைபெறும்

மயோன் முஸ்தபா: ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளையில் இன்றிரவு நடைபெறும் 0

🕔26.Aug 2023

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (26) இரவு தெஹிவளை முஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது கிருலப்பனையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின் பார்வைக்காக ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா – இன்று அதிகாலை காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்த

மேலும்...
தாயைப் பார்க்க விடுமுறை இல்லை: தொழிலுக்கு ‘குட்பாய்’ சொன்ன பொலிஸ் கொன்ஸ்டபிள்

தாயைப் பார்க்க விடுமுறை இல்லை: தொழிலுக்கு ‘குட்பாய்’ சொன்ன பொலிஸ் கொன்ஸ்டபிள் 0

🕔26.Aug 2023

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் – நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் ‘அததெரண’ செய்தி வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பயிலுனர் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளார். பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுமுறை எடுக்காமல்

மேலும்...
அருகம்பே அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்: அங்கு சென்ற ஜனாதிபதி தெரிவிப்பு

அருகம்பே அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்: அங்கு சென்ற ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.Aug 2023

அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி,

மேலும்...
சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔25.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர – அண்மையில் நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதவான் தொடர்பாக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் உரையாற்றியதோடு, அவர்

மேலும்...
உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம் 0

🕔24.Aug 2023

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் இறுதிப் போட்டியில் மோதினர். இதில் முதல் இரண்டு சுற்றுகளும் ட்ரோ (Draw) வில் முடிந்தன. இதனையடுத்து இன்று டைபிரேக்கர் சுற்றுகள் இடம்பெற்றன.

மேலும்...
2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன 0

🕔24.Aug 2023

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் (duplicate invoices) மூலம் இந்த

மேலும்...
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு விளக்க மறியல்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு விளக்க மறியல் 0

🕔24.Aug 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்த – முன்னாள் கணக்காளரை  எதிர்வரும் செப்டம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை(23) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட

மேலும்...
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா 0

🕔23.Aug 2023

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் சற்று முன்னர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்துக்கு இந்திய மதிப்பில் 615 கோடி செலவானது. இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386

மேலும்...
ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்து, கல்வி ராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்து, கல்வி ராஜாங்க அமைச்சர் அறிவிப்பு 0

🕔23.Aug 2023

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே,

மேலும்...
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம்

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம் 0

🕔23.Aug 2023

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது அமைச்சு அலுவலகத்துக்கு மொத்தமாக 80 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தின் மின் கட்டணத் தொகையை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ‘சிவப்பு பட்டியல்’ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔23.Aug 2023

போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சுமார் 30 மாணவிகளை சேர்ப்பதற்காக, அவர் இந்த போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் தெய்யன்னவெல கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தராவார். அவர்

மேலும்...
தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி

தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி 0

🕔22.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 08 பவுன் தங்க நகைகள், தவறுதலாக பழைய துணிகளுடன் குப்பையில் வீசப்பட்டன. சாவகச்சேரி நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில், குப்பை மேட்டில் இருந்து அவற்றை தேடியெடுத்து ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (21)

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்