மயோன் முஸ்தபா: ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளையில் இன்றிரவு நடைபெறும்

🕔 August 26, 2023

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (26) இரவு தெஹிவளை முஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தற்போது கிருலப்பனையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின் பார்வைக்காக ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா – இன்று அதிகாலை காலமானார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்த முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் அம்பாறை மாவட்டத்தில் அவரின் மகனைக் களமிறக்கியிருந்தார்.

இருந்தபோதும், அண்மையில் அவர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

மயோன் (My Own) எனும் தொழில் நிறுவனத்தை பல தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பித்து, அதில் கொடிகட்டிப் பறந்ததால், அவர் மயோன் முஸ்தபா எனும் பெயரால் அழைக்கப்படுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் கணிணி கற்கையை பல தசாப்தங்களுக்கு முன்னர் மயோன் நிறுவனத்தின் ஊடாக அவர் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்