குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை

🕔 August 26, 2023

கைத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்துக்கு கடுமையான அடிமையாதல் காரணமாக, சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை என்றும், அது ஒரு மனநோய் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான குழந்தைகள் கல்வியில் தோல்வி அடைகிறார்கள் என்றும், அவர்கள் பெற்றோரை எதிரிகளாகப் பார்க்கிறார்கள் எனவும் மனநல மருத்துவர் ரூமி ரூபன் குறிப்பிடுகின்றார்.

குழந்தைகள் கைத் தொலைபேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும் போது – மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், இந்த அடிமைப் பழக்கத்தினால் அவர்களின் எதிர்காலம் முற்றாக அழிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்