எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள்

🕔 August 27, 2023

நாட்டில் இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இருந்த போதிலும் டெங்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 61,225 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஜனவரி முதல் ஜூலை வரையிலான மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில், மொத்தம் 7,369 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டனர். இருப்பினும், ஓகஸ்ட் மாதத்தில் கடந்த நாட்களில் 4,536 பேர் மட்டுமே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்பட்டதுடன், அந்த எண்ணிக்கை 13,053 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 12,963 நோய்த்தொற்றுகள் காணப்பட்டுள்ளன. கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 4,976 மற்றும் 3,949 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை 38 இறப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்