சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா

🕔 August 23, 2023

ந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் சற்று முன்னர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இதன்மூலம் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

சந்திரயான் 3 திட்டத்துக்கு இந்திய மதிப்பில் 615 கோடி செலவானது. இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் – 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது

அந்த வகையில் சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு எல்விஎம்3 எம்4 ரொக்கெட் ஜுிலை 14 மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்