தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விளக்க மறியல்

🕔 May 9, 2024

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேகரவை இம் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டொக்டர் விஜித் குணசேகரவிடிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலமொன்றை பதிவு செய்ததையடுத்து, அவரை இன்று (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டொக்டர் விஜித் குணசேகர – குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (08) கைதுசெய்யப்பட்டார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தை கொள்வனவு செய்தமை தொடர்பில் டொக்டர் விஜித் குணசேகரவை – குற்றப் புலனாய்வுப் பிரிவுினர் கைது செய்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்