கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி 0

🕔18.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே ஆகியோருக்கும் இடையில் இன்று (18) சந்திப்பொன்று இடம்பெற்றதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த சந்திப்பில் கிழக்கு

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு 0

🕔18.Jul 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும் திடீர் மரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்து காரணமாக அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு 0

🕔18.Jul 2023

அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவடைகின்றன. அதன்படி குறித்த தவணைக்கான விடுமுறை 21ஆம் திகதி வழங்கப்பட்டு, மீண்டும் 24ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jul 2023

மெல்சிறிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் – தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி 55 வயதுடைய நபர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Jul 2023

பத்து வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் விவசாய தேவையில்

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி 0

🕔18.Jul 2023

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல – ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி – பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இன்று (18) காலை நடந்த இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். உமாஓயா வேலைத்திட்டத்துக்கு பணிக்காக சென்றவர்களை, மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்ற பஸ் இவ்வாறு

மேலும்...
வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது

வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது 0

🕔17.Jul 2023

– முனீரா அபூபக்கர் – வீட்டுக் கடன் பெற்றவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் வெளிக்கடன் வசூலிக்கும் அதிகாரிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வீடமைப்புக் கடன் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருநாகல்,

மேலும்...
பெண்ணொருவரைத் தாக்கி, கைவிலங்கிட்டு இழுத்துவந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

பெண்ணொருவரைத் தாக்கி, கைவிலங்கிட்டு இழுத்துவந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔17.Jul 2023

பெண் ஒருவரை கைவிலங்கிட்டு தாக்கி இழுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதான வீதியில் நேற்று (16) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் குறித்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் தாக்கிய பின்னர்

மேலும்...
உள்நாட்டு வரி வருமானம் 93 சத வீதத்தினால் அதிகரிப்பு

உள்நாட்டு வரி வருமானம் 93 சத வீதத்தினால் அதிகரிப்பு 0

🕔17.Jul 2023

உள்நாட்டு இறைவரி திணைக்களம் – கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் சேகரித்த வரி வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் அரையாண்டில் சேகரித்த வரி வருமானம் 93 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் மொத்த வரி வருமானமாக 696,946

மேலும்...
அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி

அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி 0

🕔17.Jul 2023

மன்னம்பிட்டி  பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து மட்டக்களப்பு தனியார் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். வீதி போக்குவரத்து

மேலும்...
ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பைக்கு, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு

ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பைக்கு, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு 0

🕔17.Jul 2023

– முன்ஸிப் அஹமட் – கட்சி பேதங்கள் இன்றி தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு தான் செய்து கொண்டிருப்பதாகவும், தன்னிடம் உதவிகள் கேட்டு வருகின்றவர்களிடம் அவர்கள் எந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் எனக் கேட்பதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், லொயிட் குழும தலைவருமான யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்

மேலும்...
பொலிஸ் காதலியின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட பொலிஸ் காதலன்: ஒருவர் கைது, மற்றவருக்கு பதவி பறிபோனது

பொலிஸ் காதலியின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட பொலிஸ் காதலன்: ஒருவர் கைது, மற்றவருக்கு பதவி பறிபோனது 0

🕔17.Jul 2023

தனது காதலியினுடைய உடலின் மேற்பகுதியை – நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை (15) கைது செய்துள்ளனர். இவரின் காதலி பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பொலிஸ் கொன்ஸ்டபிள்

மேலும்...
நீர் கட்டணம் செலுத்தத் தவறிய 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் விநியோகம் துண்டிப்பு

நீர் கட்டணம் செலுத்தத் தவறிய 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் விநியோகம் துண்டிப்பு 0

🕔16.Jul 2023

நீர்க்கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 90617 பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை நீர் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 5277 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தினுள் 29

மேலும்...
நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம்

நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம் 0

🕔16.Jul 2023

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் மற்றுமொரு ரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2023 பெரும்போகம் மற்றும் 2024 ஆம் ஆண்டு நெற்சைய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேலும் ஒரு ரசாயன உரம் – இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இந்த வருடம் மூன்று

மேலும்...
எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு

எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு 0

🕔14.Jul 2023

இலங்கையில் சினோபெக் நிறுவனம் எரிபொருள் வர்த்தகத்தின் பொருட்டு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 3203 கோடி ரூபா) முதலீடு செய்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான நிரப்பு நிலையங்களை அமைத்து, இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு அதிகாரசபை ஆகியவை கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்