பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி

🕔 July 18, 2023

ல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல – ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி – பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

இன்று (18) காலை நடந்த இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

உமாஓயா வேலைத்திட்டத்துக்கு பணிக்காக சென்றவர்களை, மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்ற பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ் சாரதியே உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்