சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

🕔 July 18, 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்று வரும் திடீர் மரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்து காரணமாக அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.

சுகாதார அமைச்சரின் நிலைப்பாடு

இது இவ்வாறிருக்க, சிலருக்காக தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

நேற்று (17) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர், கையில் உள்ள விஷயத்தை சிறுமைப்படுத்த மாட்டோம் என்றும், அதற்கு பதிலாக ‘இலவச சுகாதார அமைப்பைத் தாக்க முயற்சிப்பவர்களை எதிர்கொள்ளத் தயார்’ என்றும் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதிகாரர் யார் என குறித்த நிகழ்ச்சியில் வினவப்பட்ட போது, இது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றார்.

“சதிகாரர் யார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், இந்நேரம் அவரை சிஐடியிடம் ஒப்படைத்திருப்பேன்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்