கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

🕔 July 18, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே ஆகியோருக்கும் இடையில் இன்று (18) சந்திப்பொன்று இடம்பெற்றதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தது. மேலும் சுகாதார துறையில் ஆளுநர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிபெற அவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் தங்கள் சேவையினை முழுமையான அற்பணிப்பணிப்புடன் வழங்கி வருகின்றமை தொடர்பில் – ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்ததோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரிடம் உறுதியளித்தார் எனவும், ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்