நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம்

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் மற்றுமொரு ரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2023 பெரும்போகம் மற்றும் 2024 ஆம் ஆண்டு நெற்சைய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேலும் ஒரு ரசாயன உரம் – இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
இந்த வருடம் மூன்று பருவங்களுக்குப் பின்னர் நெற் செய்கை விவசாயிகளுக்கு டிபிஎஸ் உரத்தை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, ஒரு ஹெக்டயருக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் இரண்டு ஹெக்டயர்களுக்கு 40 ஆயிரம் ரூபா வவுச்சர் வழங்கப்பட்டது.