நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம்

🕔 July 18, 2023

மெல்சிறிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் – தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி 55 வயதுடைய நபர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை காண ஏராளமான பொதுமக்கள் நீதிமன்றம் முன்பாக கூடினர்.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருடன் பொலிஸார் இணைந்து, சம்பந்தப்பட்டநபரை கூரையிலிருந்து கீழே இறக்கினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்