பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு 0

🕔21.Jul 2023

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their posts) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஜனவரி 1 முதல் 2023 மே 25 வரையிலான காலப்பகுதியில்

மேலும்...
மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம்

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம் 0

🕔21.Jul 2023

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டொக்டர் அசேல குணவர்தன, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டதாக விளக்கமளித்தார்.

மேலும்...
வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம்

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம் 0

🕔21.Jul 2023

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்தார். அத்துடன், கொழும்பு நகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களை

மேலும்...
ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கம்: ரெயாஸ் மெஹ்லார் நியமனம்

ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கம்: ரெயாஸ் மெஹ்லார் நியமனம் 0

🕔20.Jul 2023

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை – தன்னை பதவி நீக்கியுள்ளதாக ரொஹான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இன்று (20) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ரோஹான் பெர்னாண்டோ 2020ஆம் ஆண்டு – ரெலிகொம் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும்...
ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு 0

🕔20.Jul 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி

மேலும்...
லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது

லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது 0

🕔20.Jul 2023

லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார். அதன்படி, நாட்டிலுள்ள முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், அதன் லாபத்திலிருந்து மேற்படி தொகையை வழங்கியுள்ளது. அதன் முதன்மைப் பங்குதாரரான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக இந்த தொகை

மேலும்...
பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது 0

🕔20.Jul 2023

பெண் ஒருவருடன் தகாத உறவை வைத்திருந்த 23 வயது இளைஞன், அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவருக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (19) செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரும்

மேலும்...
நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது

நீதிமன்றின் சான்றுப்பொருளான கஞ்சாவை திருடி விற்க முயன்ற, நீதிமன்ற உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jul 2023

– லெம்பட் – மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளாக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் (19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர், மன்னார்

மேலும்...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔19.Jul 2023

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் 190 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 06 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் – இன்று காலை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உட்பட பல தரப்பினர் இந்த சட்டமூலத்தின் உட்பிரிவுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தமை காரணமாக, இந்தச் சட்டமூலம் சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக

மேலும்...
‘அஸ்வெசும’ திட்டத்திலிருந்து ஒதுங்கியுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பை பெறுவது தொடர்பில் கலந்துரையாடல்

‘அஸ்வெசும’ திட்டத்திலிருந்து ஒதுங்கியுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பை பெறுவது தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔19.Jul 2023

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் மக்களின்

மேலும்...
16 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி: நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கணவன், மனைவி

16 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி: நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கணவன், மனைவி 0

🕔19.Jul 2023

நிதி நிறுவனமொன்றை நடத்தி 16 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இதன்படி, குறித்த

மேலும்...
தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள் 0

🕔18.Jul 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும்

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு 0

🕔18.Jul 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (ஜூலை 18) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தில் மேற்படி இருவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர்

மேலும்...
நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில் 0

🕔18.Jul 2023

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை தொடர்வதா? இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
கோதுமை மா விலை குறைகிறது

கோதுமை மா விலை குறைகிறது 0

🕔18.Jul 2023

கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலையை 10 ரூபாவால் குறைக்க கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இன்று இரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோதுமை மா முகவர்களுக்கு 210 ரூபாவுக்கும், சந்தையில் அதிகபட்ச சில்லறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்