மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம்

🕔 July 21, 2023

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டொக்டர் அசேல குணவர்தன, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டதாக விளக்கமளித்தார்.

இருந்தபோதும் இரண்டு மயக்க மருந்துகளும் வெவ்வேறு மருந்துகளால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன என்றும், அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த மாற்று மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

சிக்கல்கள் ஏற்படும் போது மருந்தை மாற்றும் நடைமுறை சாதாரணமானதே தவிர, பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் இல்லை எனவும் இதன்போது அவர் கூறினார்.

மேலும், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும், இலங்கையின் மருந்து இறக்குமதிகள் எப்போதும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தரத்திற்கேற்பவே மேற்கொள்ளப்படுவதாகவும் டொக்டர் குணவர்தன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்