லிற்ரோ நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா வழங்கியது

🕔 July 20, 2023

லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார்.

அதன்படி, நாட்டிலுள்ள முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், அதன் லாபத்திலிருந்து மேற்படி தொகையை வழங்கியுள்ளது.

அதன் முதன்மைப் பங்குதாரரான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக இந்த தொகை இன்று (20) கையளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருடிக்கடியை அடுத்து எரிவாயுவுக்கான விலையினை அதிகரித்த லிற்றோ நிறுவனம், அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக எரிவாயுவின் விலையைக் குறைத்தது.

ஆயினும், மற்றொரு எரிவாயு நிறுவனமான லாஃப்ஸ் நிறுவனமானது – லிற்றோ நிறுவனத்தின் அளவுக்கு எரிவாயுவின் விலைகளைக் குறைக்கவில்லை.

இது தொடர்பில் மக்கள் தமது அதிருப்பதியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments