ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கம்: ரெயாஸ் மெஹ்லார் நியமனம்

🕔 July 20, 2023

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை – தன்னை பதவி நீக்கியுள்ளதாக ரொஹான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (20) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

ரோஹான் பெர்னாண்டோ 2020ஆம் ஆண்டு – ரெலிகொம் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டார்.

புதிய தலைவர் நியமனம்

இதேவேளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினரான ரெயாஸ் மெஹ்லார், அரச நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற பணிப்பாளர் சபை கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு மத்தியில் உள்ளதோடு, அந்த நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கான முன்மொழிவுகளும் காணப்படுகின்றன.

மே மாதம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட பல நிறுவனங்களில் ரெலிகொம் நிறுவனமும் ஒன்றாகும்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குகளை விலக்கொள்வது தொடர்பாக, திறைசேரியின் செயலாளர் மே மாதம் இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்தார்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின்ன் பங்குகளில் திறைசேரி 49.50% வீதமானவை உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்