அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் ஐ.தே.கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் ஐ.தே.கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள் 0

🕔28.Jul 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அட்டாளைச்சேனையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், லொயிட்ஸ் குழுமத்தின் தலைவருமான யூ.கே. ஆதம்லெப்பை தலைமையில்

மேலும்...
போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔28.Jul 2023

பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்கு மொத்தம் 12.2 பில்லியன் ரூபா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார். எல்லே குணவன்ச தேரர்

மேலும்...
இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது

இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது 0

🕔27.Jul 2023

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட 05 இஸ்லாமிய அமைப்புகளுக்கன தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்,

மேலும்...
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு

தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு 0

🕔27.Jul 2023

தபால் மா அதிபர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து தபால் திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் ஒப்பிட்டு பார்த்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த

மேலும்...
மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல் 0

🕔27.Jul 2023

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி

மேலும்...
புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது

புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது 0

🕔27.Jul 2023

நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத் திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெனாண்டோ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை 0

🕔26.Jul 2023

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் இன்று

மேலும்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம் 0

🕔26.Jul 2023

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் அங்கீகரிக்கப்படாதவை என்பதால் அவை நிறுத்தப்பட வேண்டும் எனும் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த விடயம் கணக்காய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு – நீதித்துறையும் இதுதொடர்பில் தீர்ப்பளிக்க வேண்டும் என, ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. “அவ்வாறானதொரு விடயம்

மேலும்...
ஜப்பான் சனத்தொகை சடுதியாக வீழ்ச்சி: வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பான் சனத்தொகை சடுதியாக வீழ்ச்சி: வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔26.Jul 2023

ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய சமுதாயம் நாடு முழுவதும் முதுமை அடைந்து வருவதாகவும், குறைந்து வரும் மக்கள்தொகையை ஈடுசெய்வதில் வெளிநாட்டுப் பிரஜைகள் எப்போதும் பெரிய பங்கை வகிப்பதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. முதல் முறையாக,

மேலும்...
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔26.Jul 2023

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மூன்று வருட காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிரேஷ்ட பேராசிரியர் மானகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றி வந்தார். அவர் விலங்கியல் பேராசிரியராகவும், ஆராய்ச்சி பேரவையின் இணைத் தலைவராகவும்,

மேலும்...
ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்:  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔25.Jul 2023

ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு

மேலும்...
அரச உத்தியோகத்தர்களை தாக்கிப் பேசிய அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு பதிலடி: மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு

அரச உத்தியோகத்தர்களை தாக்கிப் பேசிய அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு பதிலடி: மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔25.Jul 2023

அரச உத்தியோகத்தர்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்து, பிரச்சினையை சுமூகத்துக்குக் கொண்டுவந்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்

மேலும்...
போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔25.Jul 2023

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பான ஆவணங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) கையளித்தார். நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக,

மேலும்...
கைத்தொலைபேசி திருட்டுக் கும்பல் கல்முனையில் சிக்கியது: வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் இலக்கு என தெரிவிப்பு

கைத்தொலைபேசி திருட்டுக் கும்பல் கல்முனையில் சிக்கியது: வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் இலக்கு என தெரிவிப்பு 0

🕔25.Jul 2023

– பாறுக் ஷிஹான் – கைத்தொலைபேசிகளை நீண்ட காலமாக திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடப்பட்டமை தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள் 0

🕔25.Jul 2023

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – பல வருட இழுபறிகளுக்குப் பின்னர், தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கையொப்பமிட வேண்டுமென சூறா கவுன்சில் முன்னாள் செயலாளரும் மார்க்க அறிஞருமான இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் வேண்டுகோள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்