பொலிஸ் காதலியின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட பொலிஸ் காதலன்: ஒருவர் கைது, மற்றவருக்கு பதவி பறிபோனது

🕔 July 17, 2023

னது காதலியினுடைய உடலின் மேற்பகுதியை – நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை (15) கைது செய்துள்ளனர்.

இவரின் காதலி பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பொலிஸ் கொன்ஸ்டபிள் தனது காதலியுடனான வீடியோ தொலைபேசி உரையாடலின் போது, அவரின் மேல் உடலைக் காட்டுமாறு வற்புறுத்தி அதை பதிவு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்த போது, அவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

காதலியான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் மில்லனியா பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது, சீருடை அணிந்திருந்த நிலையில் தனது உடலை காதலனிடம் காட்டியுள்ளார்.

மில்லனியா பொலிஸ் பெண்கள் விடுதியில் இவர் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும், அவர்கள் உடலுறவு கொள்வதை காதலன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலி – சந்தேக நபரின் நடத்தையில் ஏமாற்றமடைந்த பின்னர் அவருடனான உறவை முறித்துக் கொண்டார் என்றும், இதனையடுத்து சந்தேக நபர் குறித்த வீடியோகளை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை 6 ஆம் திகதி சமூக ஊடக தளங்களில் தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டது பற்றி பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் அறிந்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த ஜூலை 7ஆம் திகதி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

பின்னர் நடந்த விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் பொலிஸ் கொன்டபிள் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையிலேயே சமூக ஊடகங்களில் இவ்வாறு அவரின் வீடியோகள் பகிரப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், வீடியோகளில் குறித்த பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் சீருடையை அணிந்திருந்தமையினால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்