அட்டாளைச்சேனையில் போதைக்கு எதிரான நடைபவனியும், கருத்தரங்கும்: பொதுமக்களுக்கும் அழைப்பு

அட்டாளைச்சேனையில் போதைக்கு எதிரான நடைபவனியும், கருத்தரங்கும்: பொதுமக்களுக்கும் அழைப்பு 0

🕔15.Dec 2022

போதைப் பொருருக்கு எதிரான விழிப்புணர்வுக் கருந்தரங்கு ஒன்று, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் (17) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ‘நாம் ஊடகர் பேரவை’ ( We Journalists Forum) நடத்தும் இந்த நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வை.எம்.எம்.ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை கிளையினர் அனுசரணை வழங்குகின்றனர். இந்தக் கருத்தரங்கு முன்னதாக – போதைப்

மேலும்...
போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்து, பொலிஸ் சேவையில் இணைந்தவர் சிக்கினார்

போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்து, பொலிஸ் சேவையில் இணைந்தவர் சிக்கினார் 0

🕔15.Dec 2022

போலியான கல்விச் சான்றிதழைச் சமர்ப்பித்து பொலிஸ் சேவையில் இணைந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், நேற்று முன்தினம் (13) கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டார். சாவகச்சேரி பொலிஸில் கடமையாற்றும் மேற்படி பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர் 2020ஆம் ஆண்டு பொலிஸ்

மேலும்...
‘அரகலய’ செயற்பாட்டாளர் டிலான் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி

‘அரகலய’ செயற்பாட்டாளர் டிலான் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி 0

🕔15.Dec 2022

‘அரகலய’ போராட்டக்காரரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான டிலான் சேனாநாயக்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த டிலான், கால் மற்றும் தோள்பட்டையில் காயமடைந்த நிலையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நுகேகொட பாகொட வீதியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு அருகில்

மேலும்...
‘ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா’வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: ஆட்சேபித்ததாக மூத்த ஊடகவியலாளர் அமீன் தெரிவிப்பு

‘ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா’வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: ஆட்சேபித்ததாக மூத்த ஊடகவியலாளர் அமீன் தெரிவிப்பு 0

🕔14.Dec 2022

– மரிக்கார் – இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடத்திய 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளா்களுக்கான விருது வழங்கும் விழாவில், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஊடகவியலாளா்களுக்கான மேற்படி விருது வழங்கும் விழா, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் தலைமையில் நேற்று (13) மௌன்ட்லவினியா பீச் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது மூத்த ஊடகவியலாளர்கள் ஐவருக்கு வாழ்நாள் சாதனையாளர்

மேலும்...
இலங்கையின் மூலோபாயத் திட்டத்துக்கு, உலக உணவுத் திட்டம் அங்கிகாரம்

இலங்கையின் மூலோபாயத் திட்டத்துக்கு, உலக உணவுத் திட்டம் அங்கிகாரம் 0

🕔14.Dec 2022

இலங்கையின் மூலோபாயத் திட்டத்துக்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இலங்கையின் மூலோபாயத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பணியாளர்களிடம், ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்துக்காக பெருந்தொகை பணம் கோரப்படுவதாக புகார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பணியாளர்களிடம், ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்துக்காக பெருந்தொகை பணம் கோரப்படுவதாக புகார் 0

🕔14.Dec 2022

– அஹமட் – ஒரு லட்டசம் பேருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில் பெற்று – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்களிடம், ஆண்டு இறுதி நிகழ்வினை கொண்டாடுவதற்கெனத் தெரிவித்து, பெருந்தொகைப் பணம் கோரப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மேற்படி பணியாளர்கள் 76 பேர் இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள்

மேலும்...
அரிசி இறைக்குமதிக்குத் தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரிசி இறைக்குமதிக்குத் தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔14.Dec 2022

அரிசி இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பாஸ்மதி அரிசி வகைகளுக்கு இந்த தடை செல்லுபடியாகாது. அந்த வகையில், பாஸ்மதி ரகம் தவிர்ந்த ஏனைய அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்ட அல்லது கடன் கடிதம் திறக்கப்பட்ட அரிசி இறக்குமதிக்கு சுங்க அனுமதி

மேலும்...
நாடாளுமன்றில் ஆங்கிலப் பாடமெடுத்த சஜித் பிரேமதாஸ

நாடாளுமன்றில் ஆங்கிலப் பாடமெடுத்த சஜித் பிரேமதாஸ 0

🕔14.Dec 2022

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (13) நாடாளுமன்றத்தில் ஆங்கிலப் பாடமொன்றை நடத்தினார். அவருக்கும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றத்தின் போது அவர் இந்தப் பாடத்தை நடத்தினார். Restore எனும் வார்த்தையை ராஜாங்க அமைச்சர் கூறியதையடுத்து, அதன் உச்சரிப்பை சஜித் சரி செய்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து

மேலும்...
பாலியல் லஞ்சம் கோருவதை கடுமையான குற்றமாக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

பாலியல் லஞ்சம் கோருவதை கடுமையான குற்றமாக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி 0

🕔14.Dec 2022

பாலியல் லஞ்சம் கோருவதை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பாலியல் தொல்லைகள் மற்றும் அனைத்துவித பாலியல் தொந்தரவுகளைக் குற்றச் செயலாகக் கருதுகின்ற உறுப்புரையை தண்டனைச் சட்டக்கோவையில் உட்சேர்ப்பதற்கும், அதற்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் மற்றும் பாலியல் லஞ்சத்தை குற்றமாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க புதிய

மேலும்...
பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் ஞானசார தேரரிடம் கையளிப்பு

பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் ஞானசார தேரரிடம் கையளிப்பு 0

🕔14.Dec 2022

பல கோடி ரூபா பெறுமதியான ‘டொயோடா லான்ட் குரூசர் வி8’ (Toyota Land Cruiser V8) ரக சொகுசு வாகனமொன்று, பொதுபல சேனா அமைப்புக்காக அதன் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்புக்கு நீண்டகாலமாக உதவியளித்துவரும் கலாநிதி வால்டர் ஜயசிங்க என்பவர், இந்த வாகனத்தை வழங்கியுள்ளார். வாகனத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனியார் துறையினர் தொழில் வழங்கப் பயப்படுகின்றனர்: அமைச்சர் பிரசன்ன நாடாளுமன்றில் தெரிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனியார் துறையினர் தொழில் வழங்கப் பயப்படுகின்றனர்: அமைச்சர் பிரசன்ன நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔13.Dec 2022

– முனீரா அபூபக்கர்- பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவருடைய மகனைத் தாக்கிய சம்பவத்தில், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று ஆளும்கட்சியின் தலைமை அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (13) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு சரிந்து விழும்

மேலும்...
இலங்கையின் பெருமையை ‘தட்டிப் பறித்த’ கமல்ஹாசன்: பிக் பொஸ் நிகழ்சியில் நடந்த தவறு

இலங்கையின் பெருமையை ‘தட்டிப் பறித்த’ கமல்ஹாசன்: பிக் பொஸ் நிகழ்சியில் நடந்த தவறு 0

🕔13.Dec 2022

‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ எனும் தகவல் பிழையொன்றினை ஞாயிற்றுக்கிழமை இரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டார்.

மேலும்...
கோட்டா அவதியுறுகிறார்: பசில்

கோட்டா அவதியுறுகிறார்: பசில் 0

🕔13.Dec 2022

இலங்கையின் மக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்வதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதியுறுவதாக அவரின் சகோதரர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பசில் ராஜபக்ஷ,, முன்னாள் ஜனாதிபதி மக்களுக்காக தியாகம் செய்ததாகவும், அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறினார்.

மேலும்...
முன்னாள் தலைவர் கட்சியை திருடி அழித்தார்: சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட தகவல்

முன்னாள் தலைவர் கட்சியை திருடி அழித்தார்: சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட தகவல் 0

🕔13.Dec 2022

உலகில் ஊழல் நிறைந்த முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான பார்வை ஓர் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். புதிய லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் – குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஏற்பாடு செய்திருந்த மக்கள்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும்

உள்ளூராட்சித் தேர்தல்: வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் 0

🕔13.Dec 2022

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இந்த மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என – அதன் ஆணையாளர் நாயகம் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி, டிசம்பர் 26 முதல் 30ஆம் திகதி வரையில் வேட்புமனுக்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டம் 2017

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்