பாலியல் லஞ்சம் கோருவதை கடுமையான குற்றமாக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

🕔 December 14, 2022

பாலியல் லஞ்சம் கோருவதை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பாலியல் தொல்லைகள் மற்றும் அனைத்துவித பாலியல் தொந்தரவுகளைக் குற்றச் செயலாகக் கருதுகின்ற உறுப்புரையை தண்டனைச் சட்டக்கோவையில் உட்சேர்ப்பதற்கும், அதற்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் மற்றும் பாலியல் லஞ்சத்தை குற்றமாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கிணங்க புதிய உறுப்புரைகளை உட்சேர்த்து தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

பாலியல் தொல்லைகளால் அடிப்படை மனித உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதுடன், அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குற்றத்துக்காக தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பினும், இப்பிரச்சினை தொடர்ந்து நிலவுகின்றமை கண்டறிப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்