தலைப்புச் செய்திகள்

பாகிஸ்தான் அரசின் புலமைப் பரிசில் திட்டம் தொடர்பான, வழிகாட்டல் செயலமர்வு

பாகிஸ்தான் அரசு வழங்கும் – ‘அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்’ செயற்றிட்டம் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு, நேற்று (10) குருநாகல் தெலியாகொன்ன ரோயல் ரிசப்ஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் அதிகளவு மாணவர்கள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ‘அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்’ செயற்றிட்டப் பணிப்பாளரும் பாகிஸ்தானிய உயர்கல்வி ஆணையத்தின் உறுப்பினருமான ஜஹான்ஸிப் கான், மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் துமிந்த்ரா வேதண்ட, இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் ரிம்ஸான் அமானுல்லாஹ, பாகிஸ்தானிய பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மற்றும் பாகிஸ்தானில் உயர்கல்வியைப் பூர்த்தி செய்த இலங்கை மாணவர்களும் கலந்துகொண்டனர்.