நாடாளுமன்றில் ஆங்கிலப் பாடமெடுத்த சஜித் பிரேமதாஸ

🕔 December 14, 2022

திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (13) நாடாளுமன்றத்தில் ஆங்கிலப் பாடமொன்றை நடத்தினார்.

அவருக்கும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றத்தின் போது அவர் இந்தப் பாடத்தை நடத்தினார்.

Restore எனும் வார்த்தையை ராஜாங்க அமைச்சர் கூறியதையடுத்து, அதன் உச்சரிப்பை சஜித் சரி செய்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பேசும் போது ஷெஹான் சேமசிங்க இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.

குறித்த வார்த்தையை ராஜாங்க அமைச்சர் தவறாக உச்சரித்ததாக இதன்போது சஜித் கூறினார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை தலையிடுமாறு வற்புறுத்தி இதன்போது சஜித் பிரேமதாச மற்றும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இருவரும் வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்